Wednesday, 19 February 2014

சென்னை கூவம் ஆறு



                                 
                சென்னையில் ஓடும் கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் இருந்து வருகிறது. இதன் நீளம் மொத்தம் 72 கிலோ மீட்டர்.
                  கோயம்பேடு பாடிக்குப்பம் சாலையில் இருந்து சென்னை எல்கை ஆரம்பமாகிறது. அரும்பாக்கம், அமிஞ்சிக்கரை, சேத்துப்பட்டு எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை வழியாக 17.9 கிலோ மீட்டர் தூரம் சென்னைக்குள் ஓடி கடலில் கலக்கிறது


பொழுதுப்போக்கு இடம்
                              1820-ம் ஆண்டு காலகட்டத்தில் இன்றைய கல்லூரிச் சாலையிலுள்ள கல்வித்துறை இயக்குநரகத்தின் பின்புறம் உள்ள கூவம் ஆற்றங்கரையிலும், எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை அருகில் உள்ள ஆற்றங்கரையிலும் மாலை நேரங்களில் மக்கள் கூடி விருந்துகள் வைத்துக் கொண்டாடுவது உண்டு.
            இன்றைய கடற்கரைக்குச் சென்று பொழுதைக் கழிப்பதைப்போல 1820-களில் கூவம் கரை, பொழுதுபோக்கு மையமாக இருந்து வந்துள்ளது.

 

புனிதத் தளம்:
             கூவத்தைப் புனிதமாகக் கருதினார் வள்ளல் பச்சையப்பர். அவர் அதிகாலையில் புதுப்பேட்டை, கோமளீஸ்வரன்பேட்டையிலுள்ள கூவத்துக்கு வந்து குளித்துவிட்டு, குதிரையில் கந்தகோட்டம் முருகன் கோவிலுக்குப் போவார் என்று அவரது சரிதையில் கூறப்படுகிறது.
                                 1907-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரல்ப் பென்சன் இன்றைய பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் டவுட்டன் இல்லத்தில் குடியிருந்தபோது, மாலை நேரங்களில் கூவம் கரையில் உலவச் செல்வதுண்டு. அவர் கூவத்தைநண்ப்ஸ்ங்ழ்ஹ் இர்ர்ஸ்ஹம்என்று குறிப்பிட்டுள்ளார்.
                சென்னை ஆளுநர் கிராண்ட் டப், ""கூவம் கரையோரத்தில் உள்ள மஞ்சள் அரளி மரங்களிலிருந்து நீரில் விழும் அரளி மலர்களைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது'' என்று கூறி மகிழ்ந்திருக்கிறார்.
கழிவுநீர்க் கால்வாய்
             இந்தியாவில் விளையும் பருத்தியின் மூலம் துணிகளை உற்பத்தி செய்து உடனே பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்திலிருந்து ஓர் அரண்மனை உத்தரவு வந்தது.
            அதனால், 1934-ல் கவர்னர் மார்டின் பிட், சிந்தாதிரிப்பேட்டையில் பல பகுதிகளிலிருந்து நெசவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து குடியமர்த்தினார்.
           நெசவுத் தொழில் மூலம் வெளியாகும் கழிவுகள் கூவத்தில் சேர்ந்தன. இதுதான் முதல் பாதிப்பு.
                 கூவம் ஆறு சென்னையின் மேற்குப் பகுதியில் 65 கி.மீட்டர் தூரத்தில் கேசவரம் அணையில் இருந்து தொடங்குகிறது. இந்த ஆறு கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தில் தொடங்கி, மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கண்ணார்பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அமைந்தகரை என ஓடி சாக்கடை நீரோடு கலந்து சென்னை மாநகருக்குள் வருகிறது.
              சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம், ஓட்டேரி கால்வாய்களும், நந்தனம், மாம்பலம், அரும்பாக்கம், விருகம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் ஓடைகளும் உள்ளன.
              இவைகள் மூலமாகத்தான் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் நாற்றம். கொசுக்கள் வளர்கின்றன. இன்றைக்கு அழகிய கூவம் நதியாக இருக்க வேண்டியது வெறும் சாக்கடையாக மாறிவிட்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் படிப்படியாக நாசமாகிவிட்டது.சென்னை மாநகரில் 18 கி.மீட்டர் தூரத்துக்கு கூவம் ஆறு ஓடுகிறது.


     கரையோரப்பகுதிகளில் வாழும் மக்கள்  
                 
               சென்னையின் துயரமாக விளங்குவது கூவம் ஆறும், அந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளும் தான். சென்னை மாநகரத்தின் ஒட்டு மொத்த குப்பையும், தொழிற்சாலைகளின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலந்து கடலில் சேருகின்றது.


               சிலர் சாக்கடையில் வாழும் புழுவைப் போல் இந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
               இவர்களில் சிலர் இங்கு ஆற்றின் துணி துவைபவர்கள். இவர்கள் நிரந்தரமாக இங்கே வசித்து வருகிறார்கள்.
              அரசால் இடம் பெயர்த்தப்பட்டவர்கள். இதனால் இப்பகுதிக்கு திடீர் நகரம் என்ற பெயரும் உள்ளது.
             தினமும் நுறு ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆண்கள் பலர் இங்கு மது அருந்தி தன்னுடைய வருமானத்தை அழிகின்றனர். 

           பெரும்பாலான வீடுகளில் அரசு தொலைக்காட்சி பெட்டி இருந்தது.
           இவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதியில் சிக்கல் உள்ளது. கழிப்பறைகள் எந்த வீட்டிலும் இல்லை.
எல்லாவற்றையும் விட சாக்கடையான கூவம் எந்த நேரத்திலும் உட்புகும், நோய் பரவும் அபாயம் வேறு.
            இப்படி பல பிரச்சனை இருந்தாலும் இதை பற்றி இம்மக்களுக்கும் எந்த விழிப்புணர்வும் இல்லை.
            அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திடம் மக்கள் எந்த கேள்வியும் கேட்டு விடாமல் இருக்க, மக்களின் மூளை நன்கு மலுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தொலைகாட்சி திட்டம் சென்று சேர்ந்த அளவுக்கு, மற்ற அடிப்படை வசதிகள் அப்பகுதிகளில் இல்லாமல் இருப்பது உணர்த்துகிறது.
 





2 comments: