Monday, 17 February 2014

நாவல்கள் வரலாறு


                         1741 ஆம் ஆண்டில் முதல் ஆங்கில நாவல் தோன்றியது . ஒரு நூற்றாண்டு சென்று இதன் செல்வாக்கை இந்திய படைப்பாளிகள் ஏற்றனர். புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். புனையப் பெறும் கதைவடிவம் புனைகதை ஆகிறது. இது புதினம், சிறுகதை என்னும் இரு இலக்கிய வகைகளையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும். பாரம்பரிய வழிவரும் கதைகளிலிருந்து வேறுபட்டவை புனைகதைகள்.
இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு.
உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர். நாவெல்லஸ் என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும்.  தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர். பிறகு வடமொழிப்பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர். பிறகு புதினம் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டனர். தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படித்த, படிக்கும் வாசகர்கள் உண்டு.
நாவலின் தாயகம் இத்தாலி ஆகும். கதை சூழ்ச்சி, பாத்திரங்கள், உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின் கட்டமைப்பாகும்.
நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கியவடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கியவகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது. 1858 ஆம் ஆண்டில் வங்காள மொழியில் முதல் நாவல் தோன்றியது. இதுவே இந்திய மொழிகளில் தோன்றிய முதல் நாவல். “ஆலடர் காரர் ட்யூட்டல்” என்ற நாவலை பியாரிசாத் மித்ரா(1814-1883) எழுதினார். “நாட்டின் பழங்குடிசார்ந்த தொன்மையான நாவல் இது என்று ஹெச்.ஏ.டி.பிலிப்ஸ் என்பார் கூறினாலும், பக்கிம் சந்திரசட்டர்ஜியின் நாவல்களிலிருந்துதான் உண்மையிலேயே நாவல் தோன்றியதென்பர் திறனாய்வாளர். பக்கிம் சந்திரசட்டர்ஜியின் முதல் நாவல் 1865 ல் தோன்றியது. பதினாறு ஆண்டுகள் கழித்து , தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 1879 ல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம். இது மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டதாகும். மேனாட்டாரின் வருகைக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் புதினம் பிறந்தது. ஆங்கிலக் கல்வியைக் கற்று, ஆங்கிலப் புதினங்களைக் கற்றவர்களே முதல் புதினங்களைப் படைத்தனர். ஆங்கிலக் கல்வி கற்று, நீதிபதியாகப் பணியாற்றிய மாயூரம். ச.வேதநாயகம் பிள்ளை அவர்களே 1889-இல் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவலை எழுதினார். புதினத்திற்கு எழுதிய ஆங்கில முன்னுரையில்,
‘தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம், பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்' - என்று குறிப்பிடுகின்றார்.
வேதநாயகம் பிள்ளையைத் தொடர்ந்து பலர் புதினங்கள் எழுதினர். சில வருடங்களுக்குள் வெளிவந்த பிற இரு நாவல்களும் முன்னோடிகளாக கருதப்படுகின்றன. அவை ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், அ. மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம். ஏறத்தாழ இக்காலத்தில் ஈழ இலக்கியத்தில் முதல் நாவல் உருவானது. சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம். தமிழில் நாவல் கலை பெரும் வளர்ச்சியைக் கண்டுவருகிறது
நாவல்களை, துப்பறியும் நாவல்,  சமூக நாவல்,வரலாற்று நாவல்,மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல்,  வட்டார நாவல் எனப்பல வகைப்படுத்தலாம்.

                       

No comments:

Post a Comment