1936 ஆம் ஆண்டில்
கே.சுப்பிரமணியம் “பிரேம்மசந்” என்ற உருது நாவலை “சிவசேடன்” என்று படமாக்கினார். நாவல்களை
தழுவி திரைப்படங்களை எடுக்கலாம் என்ற போக்கைத்தொடங்கி வைத்தவர் என்ற பெருமை கே.சுப்பிரமணியத்தை
சேர்ந்ததாகும். இப்படத்தில் தான் கே.சுப்புலெட்சுமி அறிமுகமானார்.
கல்கியின் வரவுடன்
தமிழ் திரையுலகில் நாவல்களை தழுவிய திரைப்படங்களின் வருகை அதிகரித்தது.1939 ஆம் ஆண்டில்
“தியாக பூமி” என்ற நாவலை அதே பெயரில் படமாக்கினார். அதனைத்தொடர்ந்து அவரது நாவல்களான
“கள்வனின் காதலி”, ”பார்த்திபன் கனவு”, போன்றவை படமாக்கப்பட்டு பெரும் வெற்றியைத் தழுவின.
அதன் பின்பு 1954 ஆம் ஆண்டில் பொய்மன் கரடு என்ற நாவலை பொன் வயல் என்ற பெயரில் படமாக்கினார்கள்.
மூ.வா. எழுதிய
“பெற்ற மனம்” , அகிலன் எழுதிய ,”வாழ்வு எங்கே?(குலமகள் ராதை), பாவை விளக்கு, கயல் விழி(மதுரையை
மீட்ட சுந்தரபாண்டி)” , மற்றும் ஜெயகாந்தன் நாவல்களான ”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,
சில நேரங்களில் சில மனிதர்கள் ,உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான்” போன்றவை படமாக்கப்பட்டன.
புதுமைப்பித்தனின் ”பொன்னகரம், கொடுக்காப்புளி மரம், நாசக்கார கும்பல் மற்றும் சிற்றன்னை.
சுஜாதாவின்
“பிரிவோம் சந்திப்போம்(ஆனந்த தாண்டவம்), ஜெயமோகனின் “7 ஆம் உலகம்(நான் கடவுள்), சு.வெங்கடேஷன்
எழுதிய “காவல் கோட்டம்(அரவான்)”, ராஜேஷ் குமாரின் ”இரவில் ஒரு வானவில்(அகராதி)”, பி.எச்.டேனியலின்
”எரியும் பனிக்காடு(பரதேசி)” முதலிய நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment