இரண்டு அருகாமை மீனவ குப்பங்களின் ஊடக பயன்பாடு: (சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை) ஓர் சிறிய ஒப்பீட்டு ஆய்வு
முன்னுரை
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இன்றியமையா பங்குகளை வகிக்கின்றன ஊடகங்கள். ஒவ்வொரு தனிமனிமனிதனும் ஏதோ ஒரு தொடர்பை ஊடகங்களுடன் ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கின்றான்.ஒவ்வொரு
காலகட்டத்திலும் ஒவ்வொரு சுவை மேலோங்கி நிற்பது போல, ஊடகங்கள் மனிதனின் ரசனைக்கு ஏற்ப வெளிப்படுவதும்
,கலைத்தகுதி
உடையதாக உருவாகுவதும் அவ்வாறு உருவாகிய கலை வடிவை அக்கால கட்டத்திற்கு ஏற்றார் போல் தருவதும் ஊடகங்கள் ஆகும்.
ஒருவரின் கற்பனைகளையும், எண்ண பரிமாற்றங்களையும் வெளியுலகிற்கு கொண்டு வந்து மனிதனைக்
கட்டிபோடும் ஆற்றல் கொண்டவை ஊடகங்கள். “18 ஆம் நூற்றாண்டில் கடற்படை யார் கைகளில் இருந்ததோ
அவர்களுக்குத் தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள் தான்
உலகை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. ஆனால் 20 -ஆம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக்
கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்”1
என்கிறார் முன்னாள்
மலேசியா பிரதமர் மகாதீர்.அந்த அளவிற்கு
சக்தி வாய்ந்ததாக ஊடகங்கள் விளங்குகின்றன.இன்றைய
காலக்கட்டத்தினை “ஊடகங்களின் யுகம்“ என்று அழைக்கும் அளவிற்கு திரைப்படத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. “மனித நாகரிகம் கண்டுபிடித்த ஆற்றல் மிக்க ஊடகங்கள். இவை மக்களின் செயல்களை வெளிப்படுத்தும் கலைவடிவம் மட்டுமல்ல, ஒரு யுகத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் உள்ளது”2 என்று கூறுகிறார் ஸர்.ஜே.ஹர்ஸ்ஷேல்.
இத்தகைய ஆற்றல் மிக்க ஊடகங்கள் இரண்டு அருகாமை மீனவ குப்ப மக்களிடம்
எந்தமாதிரியான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதனை ஒப்புமைப்படுத்துவதே
இந்த ஆய்வாக அமைகிறது.
ஆய்வுக்கான
தலைப்பும், விளக்கமும்
ஊடகங்கள் மனித வாழ்வில் ஒரு மாபெரும் தாக்கத்தினை
ஏற்படுத்துகின்றன. வளர்ந்த நாடுகள், வளரா நாடுகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லாரையும் பாகுபாடின்றி ஈர்த்து தன்
வயப்படுத்தும் தன்மை கொண்டவை. கவனத்தை ஈர்த்தல், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துதல்,
நடத்தையை மாற்றி அமைத்தல், வாழ்வின் அறநெறியையே புறக்கணித்தல்,
வன்முறையை வாழ்வாக ஏற்றல் என ஊடகத்தின் தாக்கம்
சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்
உள்ளது போல், ஊடகமும் சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஓர் ஆக்கப்பூர்வமான சக்தியாக
செயல்படுகிறது.மக்கள் ஊடகமாகவும் மாற்றத்திற்கான ஊடகமாகவும் செயல்பட முடிகிறது
இக்காலத்தில் ஊடங்களில் வரும் நிகழ்ச்சிகள் மக்களிடம் உளவியல் ரீதியாக
ஏற்படுத்தி உள்ள தாக்கங்களை ஆய்வு செய்வதன் மூலம் ஆக்கப்பூர்வமான ஊடக நிகழ்ச்சிகள் உருவாக
இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது.
ஆய்வாளருக்குள்ள ஈடுபாடு
ஆய்வாளர் தன் இளநிலைப் பட்டப்படிப்பு ‘காட்சித்தொடர்பியல்’ (Visual Communication)
என்ற துறைத் தேர்ந்தெடுத்து படித்து முதல்நிலை மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். ஊடகங்கள் மற்றும்
மனிதன் பற்றி ஆய்வு செய்வதில் ஆர்வம் உள்ளவர் என்பதாலும், இந்த ஆய்விற்கு முன்பே பல ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளத்தால் இந்த
தளத்தினை நேசிப்பதற்கான காரணமாக அமைகின்றது.
ஆய்வின்
நோக்கம்
இன்றைய நிலையில்
எல்லா வீடு களிலும் ஊடகங்களின் ஆதிக்கம்
அதிகம் . தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் இந்த இரு மீனவ குப்பங்களை
ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்வதன் மூலம் ஊடகத்தின் வலிமை, இம்மக்களிடம்
உளவியல் ரீதியாக அது ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் போன்றவற்றை அறிவதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.
ஆய்வு
எல்லைகள்
ஆய்வின் எல்லையாக பெரிய நீலாங்கரை ,
சின்ன நீலாங்கரை
குப்பங்கள்,மேலும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாளிதழ்கள்
மற்றும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நெடுத் தொடர்கள் , பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் ,
வானொலி நிகழ்ச்சிகள் , இணையம் போன்றவை ஆய்வு எல்லைகளாக அமைந்தன .
ஆய்வு
மூலங்கள்
ஆய்வுக்கான ஆதார மூலங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1.முதன்மை
ஆதாரங்கள் (Primary Sources)
ஆய்வுக்கு முதன்மை ஆதாரமானதாக அமையப்போவது பெரிய நீலாங்கரை,சின்ன நீலாங்கரை குப்பத்து மக்கள் முதன்மை
ஆதாரங்களாக அமைகின்றனர்.
2.துணை
ஆதாரங்கள்(Secondary Sources)
ஆய்வினை மேற்கொள்ள முதன்மை ஆதாரங்களுக்கு உதவியாக அமையும் ஏனைய ஆதாரங்களான ஊடகங்களின் வரலாறு, அதனை எடுத்து சொல்லும் புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்திகள், நேர்காணல்கள், வலைப்பதிவுகள் போன்றவை துணை ஆதாரங்கள் ஆகும்.
கருதுகோள்கள்
தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி போக்கினை எடுத்து ஆய்வு செய்யும் போது ஊடகங்களின் அதிதி வளர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக தொலைக்காட்சியின்
ஆதிக்கம் மக்களிடம் அதிகம்.உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது.
ஏதாவது ஒரு ஊடகத்தை சார்ந்தே மக்கள் இயங்கி கொண்டு இருக்கின்றனர். தூக்கம்
விழிப்பதில் தொடங்கி இரவு தூங்க செல்லும் வரை ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி
வருகின்றன. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஊடகங்களின் தேவை இன்றியமையாத ஒன்றாகவே
இருக்கின்றன.
ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில்
ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும்,எதைச் சார்ந்திருக்க வேண்டும்,எதைச் சாப்பிட வேண்டும்,எதை உடுக்கவேண்டும்,எதைக் குடிக்கவேண்டும்,எதைப் படிக்க வேண்டும்,எதைப் பார்க்க வேண்டும்,எதை வாங்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலே அல்லது அவன்
அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன .
தொலைக்காட்சியில் வரக்கூடிய
நெடுந்தொடர்கள் அவற்றின் கதாபத்திரங்கள் மக்கள் மனதில் பெரும் தாக்கங்களை
ஏற்படுத்தி உள்ளன என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. ஊடகங்கள் அறிவை போதிக்கின்றன என சிலர் வாதிடுவதும்
உண்டு.இளைஞர்களை பாலுணர்ச்சிக்கு அடிமையாக்கி,அவர்களைத் தனது
கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இன்றைய நடிகர்கள் நாளைய தலைவர்களாகும் நிலை உள்ளது. இந்த
கண்மூடித்தனமான தனிமனித வழிபாடு இந்தியாவில் உள்ளது. திரைப்படங்களை விட அதிகம்
சக்தி வாய்ந்தது விளம்பரங்கள். எதை
படிப்பது, எதை உடுப்பது என்பதை
நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது.
ஆய்வின்
அணுகுமுறைகள்
ஊடகங்கள் எவ்வாறான தாக்கங்களை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது, இந்த ஊடக வடிவு எந்த பாதையில் பயணிக்கின்றது. எந்த மாதிரியான பயணத்தினை செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதினால்
இது ஒரு சமூக ஆய்வுமுறை( Sociological Research
Method) என்கிற
வரையறைக்குள் வருகின்றது.
இந்த ஊடக வடிவம் ஆரம்பத்திலிருந்து படைப்பாளிகளுக்கும், பார்வையாளர்கள் மற்றும் வாசிப்பவர்களையும் பாதிக்கின்றன மனதளவில் அதிக தாக்கங்களை ஏற்படுத்துவதினால் உளவியல் சார்ந்த ஆய்வுக்கு (Psychological Research) உட்படுகின்றது.
இரண்டு அருகாமை மீனவ குப்பங்களை ஒப்புமைப் படுத்தி ஆய்வு
மேற்கொள்ளப்படுவதாலும், மேலும் ஊடகங்களையும் மனிதனையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளதாலும் இது ஒப்பீட்டு ஆய்வின் (Comparative Research) என்ற வரையறுக்கும் உட்படுத்தப்படுகின்றது.
இந்த ஆய்விற்கு உதவும் வகையில் 30 வினாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது தரவுகள் திரட்ட
எதுவாக அமையும்
இலக்கிய மதிப்பீடு
இதுவரை வெளிவந்துள்ள ஊடகங்கள் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கவை
சில உள்ளன . ஸ்ரீதயாளன்
ஸ்ரீபிருந்திரன் எழுதிய தொலைக்காட்சி – கலாசாரம் – தொடர்பியல்,
எழுத்தாளர் ஜெ.பொன்கிரகம் குறிப்பிடுகையில்“விற்பனையாளர்கள் விளம்பரங்களின் வாயிலாக
நுகர்வோரை ஏமாற்றுகின்றனர்” 1 இவ்வாறு இவர் குறிப்பிட இந்த வாக்கியம் தற்போது நடைமுறையை அப்பட்டமாக
சித்தரிப்பதாக நான் கருதுகிறேன். தோழர் M.C. லோகநாதன் எழுதிய பொழுது போக்கு ஊடகங்களின் வழியில்
ஆணாதிக்கம்,“தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மக்கள் மத்தியில் ஒரு விதமான
உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்துக்கின்றன,குறிப்பகாக பெண்கள் மத்தியில் அதன் கதாப்பாத்திரங்களின்
தாக்கம் அதிகம் என குறிப்பிட்டுயுள்ளார்”2முனைவர் ஞானபாரதி என தனது கண்ணீர் சிந்தும் கதைகள் என்னும்
நூலில் குறிப்பிட்டுள்ளார் , இந்த வாக்கியம் பெண்களின் மனநிலை சித்தரிப்பதாகவே நான்
கருதுகிறேன். இது எனது கருதுகோள்களுக்கு ஏற்ப உள்ளது .
சந்திரன் எழுதிய தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒரு ஆய்வு, இரா மகாதேவன் எழுதிய ஊடகங்களும் விளம்பரங்களும் பரிணாமம் பெறாத விளம்பரங்கள், சி பாஸ்டின் எழுதியஊடகமும் மனித மாண்பும் “ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக
மோகத்தால் இன்று பரவலாக உலக நாடுகள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றன.
ஊடகங்கள் விதைத்தவற்றில் நாம் இழந்ததுதான் அதிகமாக உள்ளது. மக்களின் போராட்ட
உணர்வுகள் மழுங்கடிப்பட்டுள்ளன. உலகமயமாதலில் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக
பங்குபெற செய்துள்ளது அதன் பாதிப்பால் உலகப் பொருளாதார பாதிப்புகள் ஒவ்வொரு
மனிதனின் முதுகெலும்பையும் உடைத்துவிடுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தை பெருக்கியும்
மறைமுகமாக மக்களின் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் சூழல்களையும்
உருவாக்கியுள்ளது”3ஊடகங்களின்
உண்மையான நிலையை எடுத்துரைக்கிறது. பாஷ்யம் கஸ்தூரி - சமூக ஊடகங்களும் புதிய புரட்சியும் ,
என இவர் ஊடகங்கள்
குறித்து முன் வைக்கும் வாதங்களை நானும் ஏற்கிறான் இது என் ஆய்விற்கு உதவும்
வகையில் அமையும் , “பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகிறது ஊடகங்கள்.
திரைப்பட நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான செய்தி;களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது,
அந்த
விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது”4முனைவர் நா.இளங்கோ - தகவல்
தொடர்பு சாதனங்களும் கதையாடலும்,அதனாஸ் ஜெசுராஸ் எழுதிய தமிழ் ஊடகங்கள் பற்றிச் சில
அவதானங்கள்,மேற்கண்ட ஆய்வுகள் ஊடகங்கள் குறித்த ஒரு
பகுதியாகவும், பொதுவான ஆய்வாகவும் வெளிவந்துள்ளன.மேலும், இவை அனைத்தும் எனது கருதுக்கோளுக்கு ஏற்ப உள்ளன என்பதில் எந்த விதமான ஐயமும்
இல்லை.
நீலாங்கரை –
அறிமுகம் :
தமிழ்நாடு காஞ்சிபுரம்
மாவட்டத்தில் உள்ளது நீலாங்கரை என்னும்
அழகிய மீனவ குப்பம்.இந்த குப்பத்தை சின்ன நீலாங்கரை,பெரிய நீலாங்கரை என பிரித்து
வைத்துள்ளனர்.பழமையும் புதுமையும் நிறைந்ததாய் காட்சி அளிக்கிறது இந்த மீனவ
குப்பம்.இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித் தொழில் ஆகும். இங்கு உலர
வைத்து தயாரிக்கப்படும் கருவாடுகள் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி
செய்யப்படுகின்றன.கன்னியம்மனை குலத்தெய்வாமாக
வழிபடுகின்றனர்.மிகவும் எழில் மிகுந்த கடற்கரையாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து
வருகிறது நீலாங்கரை.மிகவும் நீளமான
கடற்கரை என்ற காரணத்தினாலேயே இப்பகுதி நீலாங்கரை என அழைக்கப்படுகிறது.இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,688 மக்கள் இங்கு
வசிக்கின்றார்கள்.இவர்களில்53%ஆண்கள்,43%பெண்கள் ஆவார்கள்.நீலாங்கரை
மக்களின் சராசரி கல்வியறிவு68%ஆகும்.இதில் ஆண்களின் கல்வியறிவு 77%,பெண்களின் கல்வியறிவு 63%
ஆகும்.நீலாங்கரை மக்கள் தொகையில் 6%ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.சின்ன
நீலாங்கரையை விட பெரிய நீலாங்கரை பொருளாதாரத்தில் சற்று உயர்ந்தே காணப்படுகிறது.படித்தவர்களின்
எண்ணிக்கை அதிகம்.சுனாமிக்கு பின் இப்பகுதி மாற்றம்
பெற்றுள்ளது.நான் ஆய்வுக்கு செல்லும் முன்பு நீலாங்கரை
பகுதி அருட்தந்தை ஜான் சுரேஷ் ஆய்வு குறித்து தனது அனுபவங்களிலிருந்து
கூறியதாவது"ஒரு தலைப்பின் கீழ் ஆய்வு செய்யும் போது அதில் ஆய்வாளருக்கு
மனநிறைவு இருத்தல் வேண்டும்.ஒரு நபரை சந்திக்கும் போது அவர்களை கூர்ந்து கவனித்து
அவரின் இசைவுகிற்கு ஏற்ப கேள்விகளை கேட்டு,பதில்களை பெற்றுக்கொள்ள
வேண்டும்.எந்தவகையிலும் அவர்களுக்கு கோபம் வரும் வகையில் நாம் நடந்து
கொள்ளக்கூடாது என்றார்.
தரவுகள் மற்றும் விளக்கங்கள் :
தரவுகளும் அதன் விளக்கங்களும்
ஆய்வுக்கு உதவும் வகையில் அமைகின்றன.வினாக்களுக்கு பதில் அளித்த 80 நபர்களின்
அடிப்படையிலே இந்த தரவுகளும் விளக்கங்களும் இடம் பெறுகின்றன.
அட்டவணை:1
ஊடகம்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
நாளிதழ்
|
13%
|
2%
|
வானொலி
|
3%
|
7%
|
தொலைக்காட்சி
|
20%
|
35%
|
இணையம்
|
14%
|
6%
|

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும்
ஊடகம் என்று கேட்பதன் மூலம்,
எந்த
ஊடகத்தின் ஆதிக்கம் அதிகம் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது. 55% மக்கள் தொலைகாட்சியை கூறியுள்ளனர்.இதிலிருந்து
மக்களிடம் அதிக பாதிப்பினையும்,
ஆதிக்கத்தையும்
செலுத்துவது தொலைகாட்சி என்பதனை அறிந்துக் கொள்ளமுடிகிறது.
அட்டவணை:2
எத்தனை மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பீர்கள்?
இந்த வினாவின் வாயிலாக
தொலைக்காட்சி மக்களின் நேரத்தை ஆட்கொண்டுள்ளது என்பதனை அறிந்துக் கொள்ள
வழிவகைச் செய்கிறது.
நேரம்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
1 - 5
|
10%
|
13%
|
5-10
|
8%
|
30%
|
11 - 15
|
4%
|
35%
|

ஒரு நாளில் அதிகப்படியான
நேரங்களை பெண்களே(78%)
தொலைக்காட்சி
பார்ப்பதற்கு செலவிடுகின்றனர். பெரும்பாலான நேரங்களை அதனுடன் செலவிடுவதால
தொலைக்காட்சியின் தாக்கம் பெண்களிடமே அதிகம் என்பதனை உணர முடிகிறது. ஆண்கள்(22%)மீன் பிடித் தொழிலுக்கு
செல்வதால் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
அட்டவணை:3
அந்த கதாபத்திரமாக உங்களை
நினைத்து பார்த்துள்ளீர்களா?
இந்த
வினா உளவியல் ரீதியாக பெண்களின் மனநிலையை அறிந்துக் கொள்ள எதுவாக அமையும் .

தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் கதாபத்திரங்களாகவே தங்களை நினைத்து
பார்க்கின்றனர் . இது அவர்களிடம் உளவியல் சார்ந்து மாற்றங்களை ஏற்படுத்தும். நம்மை
அறியாமல் அந்த குறிபிட்ட
கதாப்பாத்திரத்தின் நடவடிக்கைகள் நம்மை ஆட்கொள்ளும் என்பதனை உணரமுடியும்
அட்டவணை:4
சுவாரஸ்யமான நிகழ்ச்சி
ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் போது மின்சாரத் தடை ஏற்பட்டால் உங்களின் மனநிலை
எப்படி இருக்கும்?
இந்த வினாவின் மூலம் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சி சார்ந்து அவர்களது மனநிலைமையை
அறிந்துக் கொள்ள முடியும். அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தினை புரிந்துக் கொள்ள முடியும்.


அட்டவணை:5
புதிய திரைப்படங்களை எங்கு
சென்று பார்ப்பீர்கள்?

கண்டுபிடிப்புகள் :
நாளிதழ்
·
இரு மீனவ குப்ப மக்களும் தாங்கள் சார்ந்து
இருக்கும் கட்சிகளின் நாளிதழ்களை அதிகம் படிக்கின்றனர்.வாசித்த செய்திகளை நண்பர்களுடன்
பகிர்வதும்,அதனை தங்கள் வாழ்வியலுடன்
ஒப்பிட்டும் பார்க்கின்றனர்.
·
தினமும் காலை வேளைகளில் நண்பர்களுடன் கூடி,பொதுவான இடத்தில நாளிதழ்
வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இம்மக்கள் உள்ளனர். பெரும்பாலும் ஆண்களே நாளிதழ்
வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருகின்றனர்.
·
மற்ற ஊடகங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில்
நாளிதழ்கள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.
·
நாளிதழ்கள் பொருத்தமட்டில் இரு குப்பங்களும் ஒரே
மனநிலை இருப்பதாகவே ஆய்வில் தெரிகிறது.பெண்களை விட ஆண்கள் அன்றாட நிகழ்வுகளை
தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறனர்.
வானொலி
·
இரு மீனவ குப்ப மக்களும் வானொலியை அரிதாகவே
பயன்படுத்துகின்றனர். இரவு படுத்து கொண்டே வானொலி கேட்கும் பழக்கம் உள்ளவர்களாக
இருகின்றனர்.இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வானொலி என்ற ஒரு ஊடகம் இல்லாமல்
போய்விடும்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சியை பொறுத்தமட்டில்
இரு மீனவ குப்பங்களிடையே வெவ்வேறு மனநிலைமையை பார்க்க முடிகிறது. பொருளாதாரம்,கல்வி,பழக்க வழக்கங்கள் போன்றவற்றால்
இரு மீனவ குப்பங்களிடையே பல வேறுபாடுகளை உணர முடிகிறது.
சின்ன நீலாங்கரை:
·
சின்ன நீலாங்கரை மக்கள் பெரும்பாலும் சன் தொலைக்காட்சியை
விரும்பி பார்க்கின்றனர்.நெடுந்தொடர்களையே அதிகம் விரும்பி பார்ப்பதாகவும், பொழுதுப் போக்கு நிகழ்ச்சிகளை
பார்ப்பது இல்லை என்றும் கூறுகின்றனர்.
·
நெடுந்தொடர்களில் வரும் கதாபத்திரங்களாக தங்களை பல
நேரங்களில் நினைத்து பார்த்தகாக கூறுகின்றனர்.
·
குழந்தைகள்,
ஆண்கள்
கட்டாயத்தினால் தொடர்களை பார்ப்பதாக கூறுகின்றனர்.
·
எதிர் மறையான கதாபத்திரங்களை ரசித்த பார்த்தாலும்,நேர்மறையான கதாபாத்திரங்களை
விரும்புகின்றனர்.
·
பெரும்பாலான வீடுகளில் பெண்களே தொலைக்காட்சியை இயக்கம்
வல்லமை உள்ளவர்களாக உள்ளனர்.
·
நெடுந்தொடர்கள் இல்லாத நேரங்களில் மட்டுமே மற்ற
நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர்.
·
நெடுந்தொடர்களில் வரக்கூடிய எதிர்மறையான முடிவுகளை
முற்றிலுமாக எதிர்க்கின்றனர்.
·
கவர்ச்சியான காட்சிகள் வரும்போது அலைவரிசையை மாற்றி
விடுகின்றனர்.
·
ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்
மின்சாரம் தடைப்பட்டால் கோபமாகி விடுவதாக கூறுகின்றனர்.
·
சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை
வெறுத்தாலும் தங்களையே அறியாமல் பார்க்க தூண்டுவதாக கூறுகின்றனர் .
·
விளம்பரம் போடும்போது வேறு அலைவரிசைமாற்றி விடுவதாக
கூறுகின்றனர்.
பெரிய நீலாங்கரை :
·
தொலைக்காட்சியை பொறுத்தமட்டில் சின்ன நீலாங்கரை
மற்றும் பெரிய நீலாங்கரை மக்கள் வெவ்வேறு மனநிலைமையில் இருக்கின்றனர்.
·
பெரிய நீலாங்கரை மக்கள் பாலிமர் தொலைக்காட்சியை
அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.
·
மொழி மாற்று தொடர்களை அதிகம் பார்க்கின்றனர்.நேரடி
தொடர்களை விட சிறந்த கதையம்சம் உள்ளதாகவும்,பிரம்மண்டமாகவும் இருப்பதாக
கூறுகின்றனர்.
·
உடைகள்,கலாச்சாரம் போன்றவை பார்பதோடு
சரி,நடைமுறை வாழ்வில்
பயன்ப்படுத்துவது இல்லை.அது நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராது என்கின்றனர்.
·
தொடர்கள் இடையே மின்சாரம் தடைப்பட்டால் அதனை பற்றி
வேறு ஊரில் இருக்கும் உறவினரிடம் செல்லிடப் பேசியின் வாயிலாக கேட்டுத் தெரிந்து
கொள்வோம் என்று கூறுகின்றனர்.
·
நடன நிகழ்ச்சிகள்,
பாடல்
நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்ப்பதாக கூறுகின்றனர். ஆனால்,தொடர்களுக்கு தரும்
முக்கியத்துவத்தை பொழுதுப் போக்கு
நிகழ்ச்சிகளுக்கு தருவது இல்லை.
·
பெரும்பாலான மக்கள் புதியதலைமுறை செய்திகளை
பார்க்கின்றனர்,அது உண்மை தன்மையுடன் இருப்பதாக
கூறுகின்றனர் .
·
Discovery,
Animal Plant போன்ற தொலைக்கட்சியைவும் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக கடல் சார்ந்த
நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பதாக கூறுகின்றனர் .
·
சுனாமி வருவதற்கு முன்புவரை தாங்களே கடல் சூழலை
அறிந்து கடலுக்கு சென்றதாகவும்,இப்பொது தொலைக்காட்சியில் வரும்
வானிலை செய்திகள் அறிந்தே கடலுக்குள் செல்வதாக குறிப்பிடுகின்றனர்.
·
இம்மக்கள் setup
box , Tata sky போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
·
நகர்புறங்களில் இருக்கக்கூடிய அனைத்து தொழிநுட்ப
சார்ந்த வளர்ச்சிகளும்,
இந்த
கடைக்கோடி மக்களிடமும் சென்றுள்ளது சிறப்பு.
இணையதளம்
இணையதளம் பொறுத்தமட்டில் இரு
மீனவ குப்ப மக்களும் ஒரே மனநிலைமையில் தான் இருக்கின்றனர்.
·
இளைங்ஞர்கள் மத்தியில் இணையதள பயன்பாடுகள் அதிகம். Whatsapp, Face book போன்ற சமுக வலைதளங்களில்
தங்களுக்கு என்ற ஒரு குழு (Group)
தொடங்கி
அதில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
·
பெரும்பாலான இளைங்ஞர்கள் தங்கள் செல்லிட பேசியின்(Mobile) வாயிலாகவே இணையதளத்தினை பயன்படுத்துகின்றனர்.
·
பெரும்பாலான சிறுவர்கள் கணினி மையங்களுக்கு சென்று
இணையதளதில் விளையாடும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
·
வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் உறவினர்களிடம் Skype யில் பேசுகின்றனர். அதில்
பேசுவது செலவு குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.
·
செய்திகளை இணையதளத்தின் வாயிலாக வாசிப்பவர்களின்
எண்ணிக்கை அதிகம்.
திரைப்படங்கள்
·
தாங்கள் விரும்பும் கதாநாயகர்களின் படங்களை மட்டுமே
திரையரங்கிற்கு சென்று பார்க்கின்றனர்.
·
புதிய திரைப்படங்களை குறுந்தகடுகளில் (CD ) பார்க்கின்றனர்.
·
குடும்பம் படங்களை அதிகம் பார்ப்பதாக கூறுகின்றனர்
.
பரிந்துரை :
Ø இந்த இரு மீனவ குப்பத்து
மக்களிடமும் தொலைக்காட்சியின் ஆதிக்கம் அதிகம் என்பதனை இந்த ஆய்வின் வாயிலாக நான்
அறிந்தது. இனி ஆய்வு செய்ய இருப்பவர்கள் இம்மக்களின் கலாச்சாரம் , பண்பாடு சார்ந்து ஆய்வு செய்தல்
புதுப்புது தகவல்களை நாம் பெற அவை வழிவகை செய்யும்.
Ø காலமாற்றத்தால் மக்களின்
மனநிலையும் மாறிவருகிறது ,
மக்களின்
மனநிலைக்கு ஏற்ப புதிய சிந்தனைகள் நிறைந்த நிகழ்ச்சிகள் வருதல் வேண்டும்.
Ø புதுமையை மக்கள்
விரும்புகின்றனர். நெடுந்தொடர்களில் புதுமையை எதிர் பார்க்கின்றனர்.மொழிமாற்று
தொடர்களை எதிர்ப்பதை விட்டு,
மக்கள்
எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதனை சிந்திக்க
வேண்டும்.
Ø வரும் காலகட்டங்களில் வானொலி
கேட்பவர்களே இருக்கமாட்டார்கள் என ஆய்வில் தெரிகிறது.வானொலி நிறுவனங்கள்
மக்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை தருதல் வேண்டும்.நிகழ்ச்சிகளை புதுமைகள் இடம்
பெறுதல் வேண்டும்.குறிப்பாக ஸ்ரீலங்கா வானொலி நிறுவனங்கள் பல புதுமைகளை கவனம்
செலுத்தி வருகிறது அதுபோல நாமும் செயல்பட்டால் நிச்சயமாக வானொலி கேட்பவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
Ø திரைபடங்களை பொருத்தமட்டில்
அதிகப்படியான மக்கள் குறுந் தகடுகளில்(CD)
பார்க்கின்றனர்.குறுந்
தகடுகளை ஒழிக்க வேண்டும் என கோஷம் போடுவதை விட்டுவிட்டு ஏன் அவர்கள் அதில்
பார்க்கின்றனர் என்பதனை நாம் ஆராயிந்து பார்க்க வேண்டும்.திரையரங்குகளின் நுழைவுக்
கட்டணத்தை குறைத்தாலே பெருவாரியான மக்கள் திரையரங்கை நோக்கி வருவார்கள்.
Ø இதில் இயக்குனர் சேரனின் home to home திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.இந்த மக்களின்
பொருத்தமட்டில் இவர்களின் மனநிலையை சேரன் நன்றாக அறிந்துள்ளார் என்பது மட்டும்
புலப்படுகிறது.
முடிவுரை :
இந்த இரு மீனவ
குப்பங்களின் ஊடக பயன்பாட்டைக் குறித்து ஆய்வு செய்ததில் பொருளாதாரத்தில் பாகுபாடு
காணப்படுவதுபோல இவர்களின் ஊடக பயன்பாட்டிலும் நாம் வேறுப்பாட்டை காணமுடிகிறது.பொருளாதாரத்தில்
சற்று மேம்பட்ட நிலையில் உள்ள பெரிய நீலாங்கரை மக்களிடம் ஊடகத்தின் தாக்கம் குறைவு.
வெவ்வேறு ஊடகங்களை இவர்கள் பயன்படுத்துவதால்
ஒரு பொதுவான போக்கை இவர்களிடம் காணமுடிகிறது.சின்ன நீலாங்கரை மக்களிடம்
ஊடகத்தின் தாக்கம் அதிகம். நெடுந்தொடர்களின் தாக்கம் சற்று அதிகமாகவே காண
முடிகிறது.
ஊடகங்கள் பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுக்கின்றன
என்பதற்கு இந்த இரு மீனவ குப்பங்களை உதராணமாக கூறலாம்.பற்றி எரியும் உண்மையான
பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகிறது. இங்கே
பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. இந்த மக்களில்
எண்பது சதவீதம் மக்கள்
வறுமை,வேலையின்மை,விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு
வாழ்க்கை நடத்துகின்றனர்.அந்தப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து
தீர்வு காணத் தூண்டாமல்,
பிரச்சினைகளில்
இருந்து திசை திருப்புகிறது ஊடகங்கள்.
அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை
ஊடகங்கள் மக்களிடம் போதிக்க முற்ப்பட வேண்டும்.தொழில்நுட்பத்தில் அதித வளர்ச்சியை
நாம் எட்டி இருந்தாலும் ,
தமிழ்நாட்டின்
கடைக்கோடியில் இருக்கும் இந்த இரு மீனவ குப்பங்களும் இன்னமும் வளர்ச்சி நிலையை அடையவில்லை
என்பதே நிதர்சன உண்மை.மது ,
திரைப்பட
நட்சத்திரங்களை கடவுளாக வணங்குதல் போன்றவற்றால் மக்களின் போராட்ட உணர்வுகள்
மழுங்கடிப்பட்டுள்ளன. ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக மோகத்தால் இன்று பரவலாக இந்த
குப்பத்து மக்கள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றனர் .
No comments:
Post a Comment