Thursday, 18 August 2016

சாதிய பாகுபாடு

நான் அடிக்கப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன், கொடுமைப்படுத்தப்பட்டேன் என எத்தனை காலம் நாம் கூறிக் கொண்டே இருக்கப் போகிறோம் என தெரியவில்லை. தலைமுறை கடந்தும் சாதிய பாகுபாடுகளை நம்மில் விதைத்து வருகின்றனர். தற்போது படித்து வரும் மாணவர்களில் பலருக்கு தான் இந்த சாதிதான் என்பது தெரியாது. பாகுபாடியின்றி பழகி வரும் சமூகத்தில் ஒரு சிலரால் மக்களிடம் நீ ஒடுக்கப்பட்ட இனம், இந்த சாதிகாரன் தான் உன்னை அடிமை படுத்தியது, இவன் உன் முதல் எதிரி என மீண்டும் மீண்டும் கூறி  மூளை சவலம் செய்வது ஏன்...? கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதேச்சையாக தாய்மூகாம்பிகை என்ற ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. அதில் சுஜாதா பிராமண பெண்மணி, அவளின் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட பெண்மணியாக கே.ஆர் விஜயா நடித்திருப்பார். தன் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட பெண்ணான கே.ஆர்.விஜயா மீதும் அவளது குழந்தை மீதும் அலாதி பிரியம். இது சுஜாதாவின் கணவருக்கு பிடிக்காது. ஒருக்கட்டத்தில் கே.ஆர்.விஜயா இறந்துவிட அவளது உடலை தனி ஒரு ஆளாக சுஜாதா கே.ஆர்.விஜயா அடக்கம் செய்வார். இதனால் சுஜாதாவின் கணவர் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவார்.  பின் போராடி மனிதர்களை மனிதனாக பார்க்க வேண்டும் என தனது கணவனுக்கு புரிய வைப்பாள். இப்படி மக்களிடம் அடிப்படை மனமாற்றம் வேண்டும் என வெளி வந்த படங்கள் ஏராளம். ஆனால் தற்போது வரக்கூடிய படங்கள் சாதிய மோதலை தூண்டும் வகையில் இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில் வெளியான கபாலி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வெளிவந்த பிறகுதான் ரஜினி என்ற ஆதிக்க சக்தியால் தன் சாதிய வெளிப்பட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. ரஜினி படங்களுக்கு எல்லா தரப்பு ரசிகர்கள் வருவதுண்டு. அப்படி படம் பார்க்க வருபவர்களை தன் வசங்களால் வசைப்படி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியுமா...? என்பது தெரியவில்லை. நல்ல கலைஞன் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முற்பட வேண்டும். அவர்களிடையே ஒரு போது பிரிவினையை உருவாக்க கூடாது. பம்பாய் படத்தில் வரும் இறுதி காட்சியில் வரும் வசனங்களை நம்மிடம் ஒருவிதமான மனமாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் ரஞ்சித்தின் வசனங்கள் குறிப்பிட்ட சாதியின் மீது வெறுப்பை உமீழ்வதாக உள்ளது. உண்மையிலேயே கபாலி என்ற திரைப்படம் சாதிய வேறுபாடுகள் இன்றி வந்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் இப்படி வெயிலில் தாக்குப்பிடிக்காத பனியைப் போல் ஆகிவிட்டது கபாலியின் வெற்றி. தலித்துக்களுக்கு எதிராக செயல்பட்டது பார்ப்பனர்கள்தான் என சிலர் கூறுவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என சொன்னது பாரதியார். வெள்ளை நிறத்தொரு பூனை என பாடி மனிதகுலத்தில் வேற்றுமைகள் களையப்பட வேண்டும் என போராடியவர் பாரதி. இவர் ஒரு பிராமணர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தாழ்த்தப்பட்ட மக்களை முத்துராமலிங்க தேவரின் உதவியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்ற வைத்தியநாத அய்யரை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என போராடி பல பார்ப்பனர்களை மறந்துவிட்டு வாழ்கின்றோம். வஞ்சிக்கப்பட்டதை மறந்து, வெறுப்பை தவிர்த்து, பாகுபாடு இல்லாதா ஒரு சமூகத்தை உருவாக்குவதில் கலைஞர்களின் பங்கு இன்றியாமையாத ஒன்று என்பதை

No comments:

Post a Comment